முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையிலான குழுவினர் முதல் முறையாக ஆய்வு மேற்கொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யத் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தலைமையில் கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு அமைத்தது. 7 பேர் கொண்ட இந்த குழுவில் தமிழ்நாடு மற்றும் கேரள அரசு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த புதிய கண்காணிப்புக் குழுவினர் தங்களது முதல் ஆய்வை இன்று முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து குமுளியில் உள்ள கண்காணிப்பு அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.