திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, பேருந்து நிற்காமல் சென்றதால் பேருந்திலிருந்து கீழே குதித்த மாணவர் படுகாயமடைந்தார்.
சீகம்பட்டியை சேர்ந்த ஹரிஹரன், நடுப்பட்டி அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக அரசுப் பேருந்தில் ஹரிஹரன் ஏறிய நிலையில், அவர் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
பேருந்து மெதுவாகச் சென்றுக் கொண்டிருந்ததால் மாணவன் பேருந்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.