இராமநாதபுரம் அருகே ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடற்கரையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்புல்லாணி அடுத்த முத்துப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதைக்கண்டித்து மீனவர்கள் கடற்கரையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி முழக்கமிட்டனர்.