அமெரிக்காவில் முட்டை தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள விலை உயர்வால் தென்கொரியா மற்றும் துருக்கியில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக அமெரிக்காவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சர் புரூக் ரோலின்ஸ் தெரிவித்துள்ளார்.