வேதாரண்யத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமாரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனக் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறி வருகிறார். இந்நிலையில் அவர் தமிழகத்திற்கு வருகை தந்ததைக் கண்டித்து நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவிரி தமிழ்தேச விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சிவக்குமாரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற நிலையில் அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.