திருப்பத்தூர் அருகே பாலாற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் ஆற்றுநீர் நுரையுடன் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஆம்பூர் அடுத்த மாரப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் பாலாற்றில் கலந்து விடுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆற்றுநீர் நுரை படர்ந்து, துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும் அவர்கள் ஆற்றுநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.