கர்நாடகாவில் கோயில் திருவிழாவின்போது தேரின் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
பெங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற மத்தூரம்மா கோயில் திருவிழாவையொட்டி 120 அடி உயரம் கொண்ட இரண்டு தேர்களை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது பலத்த காற்று வீசியதால் எதிர்பாராத விதமாக 2 தேர்களின் குடையும் சாய்ந்தது. இதில் லோஹித் என்பவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடந்தாண்டும் இதேபோல் 150 அடி உயரம் கொண்ட தேரின் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.