நெல்லையில் குடிநீர் குழாயில் இருந்து பாம்பு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறுக்குத்துறை, கொண்டாநகரம், அரியநாயகிபுரம், மணப்படை வீடு போன்ற இடங்களில், தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து, அதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தச்சநல்லூர் பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீருடன் சேர்ந்து பாம்பு வந்துள்ளது. இதுகுறித்த புகாரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.