கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறையான இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது.
அனைவரும் முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பகவதி அம்மன் கோயில், கடற்கரை சாலை, படகு குழாம் பகுதிகளிலும் சுற்றுலாபயணிகள் திரண்டனர்.