மதுரையில் ஆர்எஸ்எஸ் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயன் பெற்றனர்.
திருப்பரங்குன்றம் நெல்லு மண்டி மஹால் சன்னதி தெருவில் ஸ்ரீ குருஜி சேவா, பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனை மற்றும் மதுரை பாண்டியன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடல் எடை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமை ஆர்எஸ்எஸ் அமைப்பும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.