ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை – மும்பை அணிகள் களம் காணுகின்றன.
இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று முன்னிலையில் இருக்கும் அணிகள் என்பதால் இன்றைய ஆட்டம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக வீரர் அஸ்வின், விஜய் சங்கர், ஆந்த்ரே சித்தார்த் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
மும்பை அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதல் ஆட்டத்தில் விளையாட தடை இருப்பதால் சூர்யகுமார் அணியை வழி நடத்துவார். பும்ரா இல்லாதது அணிக்கு பின்னடைவு என்றாலும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, டிரென்ட் போல்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் இன்றைய ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என்ற கூறலாம்.