மதுரையில் திமுக முன்னாள் நிர்வாகியின் ஆதரவாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மேல் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்னாள் திமுக மண்டல தலைவர் வி.கே குருசாமியின் ஆதரவாளரான இவரை, நான்கு பேர் கொண்ட கும்பல், சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
தகவல் அறிந்து சென்ற போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 2 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கடந்த 2023ஆம் ஆண்டு வி.கே குருசாமியை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்ய முயற்சித்தது. இதில் படுகாயம் அடைந்த குருசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உடல்நலம் தேறி இருக்கிறார்.
இந்த மோதல் எதிரொலியாக தற்போது வி.கே.குருசாமியின் ஆதரவாளரும், அவரது சகோதரியின் மகனுமான காளீஸ்வரன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.