நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நியாய விலை கடையில் பொருட்களை சூறையாடிய ஒற்றை காட்டு யானை வனப் பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
வனத்தில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை தொரப்பள்ளி கிராமத்தில் சுற்றித் திரிந்தது. அப்பகுதியில் இருந்த நியாய விலை கடையை சேதப்படுத்திய அந்த யானை, கடையில் வைக்கப்பட்டிருந்த அரிசியை உண்டது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேரில் சென்ற வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி யானையை வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனர்.