கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவரை அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் 13 மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாலக்காடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதுகலை கிரிமினாலஜி முதலாமாண்டு படித்து வருபவர் ஆதி. விடுதியில் தங்கி படித்து வரும் அவரை, அங்கு பணம் காணாமல் போன விவகாரம் தொடர்பாக மண்டியிட வைத்து, 13 மாணவர்கள் கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனைதொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட 13 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.