பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்போது திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர், வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர், தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு முழக்கங்களை எழுப்பினர்.
கோவை மாவட்டம் டாடாபாத் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு குவிந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்தினர்.