திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இதனையொட்டி திருச்சி மட்டுமல்லாது அரியலூர், கரூர், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.
அந்த வகையில், ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 18வது ஆண்டாக சமயபுரம் மாரியம்மனின் படத்திற்கு அலுவலகத்தில் வைத்து பேரூராட்சி தலைவர் சரவணன் உள்ளிட்டோர் பூஜை செய்தனர்.
இதனைதொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க வேண்டுதல்களை நிறைவேற்றிடும் வகையில் அம்மனுக்கு பூக்களை கொண்டு சென்று சாத்தினர்.