புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
அன்னவாசல் தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
உறுதிமொழி எடுத்ததும் களத்தில் இறங்கிய மாடுபிடி வீரர்கள், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை போட்டி போட்டுக் கொண்டு அடக்க முயன்றனர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு குக்கர், டைனிங் டேபிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை அன்னவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.