தாம் வீல் சேரில் இருந்தாலும் சென்னை அணிக்கு விளையாட இழுத்துச் செல்வார்கள் என தோனி கிண்டலாக தெரிவித்தார்.
ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேசிய அவர், “சென்னை அணிக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தன்னால் விளையாட முடியும் என்றார்.
அது தன்னுடைய அணி உரிமை என்று கூறிய தோனி, தாம் காயமடைந்து சக்கர நாற்காலியில் இருந்தாலும், தன்னை சி.எஸ்.கே. அணிக்காக விளையாட இழுத்துச் செல்வார்கள் என்று கிண்டலாக தெரிவித்தார்.
43 வயதான தோனி நிகழாண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.