தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஊழலில் மூழ்கியுள்ளதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி விமர்சித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை போன்ற அனைத்து விவகாரங்களிலும் பாஜக கட்சி மக்களுக்கு நீதி வழங்கும் எனத் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக இதுவரை எந்த விவரங்களும் வெளிவராத நிலையில், எதற்காகத் தமிழக முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தை 4 புள்ளி 5 ஆண்டுகள் ஆட்சி செய்த முதலமைச்சர் ஸ்டாலின், ஊழலில் முற்றிலுமாக மூழ்கிவிட்டதாகக் கடுமையாக விமர்சித்தார்.