ஈரோடு அருகே ரவுடி ஜான் சாணக்கியா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள கோவை தேசிய நெடுஞ்சாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்தி உட்பட சிலரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கார்த்தி என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்ட மற்றவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.