நாகையில் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் பீச் வாலிபால் கழகத்தின் சார்பில் 4 நாட்கள் நடைபெற்ற போட்டியில், 75 அணிகள் பங்கேற்றன. அதில் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் மோதிய நம்பியார்நகர் அணியை வீழ்த்தி தமிழ்நாடு பீச் வாலிபால் அணி வெற்றி பெற்றது.
அதேபோன்று பெண்களுக்கான இறுதிப்போட்டியில், அக்கரைப்பேட்டை செந்தில்குமார் பீச் வாலிபால் கிளப் அணியை தோற்கடித்து ஏ.ஆர்.போலீஸ் அணி வெற்றி வாகை சூடியது.