நெல்லை மாவட்டம் பாபநாசம் கோவில் பகுதியில் தாமிரபரணி ஆற்றை மணிமுத்தாறு பட்டாலியன் காவல்துறை சுத்தம் செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. அந்தவகையில், பாபநாசநாதர் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் கிடந்த கழிவுப்பொருட்களை, நம் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து மணிமுத்தாறு பட்டாலியன் காவல்துறை அகற்றினர்.