திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூர் தெற்கு தோட்டம் கருப்பராயன் கோயில் அருகே புலம்பெயர் தொழிலாளர்கள் வாடகைக்குத் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், பக்கத்திலிருந்த பனியன் கம்பெனிக்கும் பரவியது.
தகவலின் பேரில் இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.