பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று கூடிய நிலையில், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இதுகுறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கர்நாடகா அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநிலங்களவையில் பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மல்லிகார்ஜூன கார்கேவின் விளக்கத்தை ஏற்க மறுத்து அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.