புதுச்சேரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகளை சிபிஐ கைது செய்தது.
இது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை லட்சுமி நாராயணன் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர்.
தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்ட நிலையில், அவை காவலர்கள் அவர்களை குண்டுகட்டாக வெளியேற்றினர்.