உதகையில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் உதகையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
அண்மையில் புதுமந்து பகுதியில் உள்ள பேக்கரிக்குள் புகுந்து கரடி பிஸ்கட் சாப்பிட்ட சிசிடிவி காட்சி வெளியாகியிருந்தது.
இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் உலா வரும் கரடியால் அச்சமடைந்துள்ள மக்கள், கரடியைக் கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.