மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்துப் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவிற்கு சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் மும்பையில் உள்ள குணால் கம்ராவின் காமெடி கிளப்பை ஷிண்டேவின் ஆதரவாளர்கள் சூறையாடினர்.
இது தொடர்பாக ஷிண்டே சேனாவின் இளைஞர் பிரிவு பொதுச் செயலாளர் உள்ளிட்ட 19 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.