காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், கூடுதல் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற இஸ்ரேல் கோரிக்கையை ஹமாஸ் ஏற்கவில்லை.
இதையடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்த இஸ்ரேல், காஸா மீதான தாக்குதலை மீண்டும் தொடங்கியது. காஸா நகரில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மீண்டும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், அதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த தாக்குதலால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.