மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் 12ம் ஆண்டு விழாவில் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது எனத் தெரிவித்தார்.