சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோயில் வளாகத்தில் மது குடித்ததைத் தட்டி கேட்ட காவலரைத் தாக்கிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏற்காட்டில் சேர்வராயன் கோயில் உள்ளது. அதன் வளாகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் மது அருந்ததியாகக் கூறப்படுகிறது.
அதனைப் பார்த்த சிறப்புக் காவல் துணை ஆய்வாளர் முருகன், கோயில் வளாகத்தில் மது அருந்தக் கூடாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், சிறப்புக் காவல் துணை ஆய்வாளரைத் தாக்கினர்.
இதனால் தோள்பட்டை, கைகளில் காயம் ஏற்பட்டதை அடுத்துச் சிறப்புக் காவல் துணை ஆய்வாளர் முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, தாக்குதல் நடத்திய இளைஞர்களை காவல்துறை கைது செய்தனர்.