யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் தாக்குதல் நடத்தியது தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதுதொடர்பாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தூய்மை பணியாளர்கள் எனக்கூறிக்கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் தனது வீட்டிற்குள் நுழைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தன் வீட்டின் படுக்கையறை, சமையல் அறையில் கழிவுகளைக் கொட்டி அசுத்தம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது தாயாரை அந்நபர்கள் மிரட்டுவது தொடர்பான காட்சியையும் வெளியிட்டுள்ளார்.