அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் மருமகள் உடனான காதலை கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டைகர் வுட்ஸ், காதல் காற்றில் இருக்கிறது என்றும், நீங்கள் என் பக்கத்திலிருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்களது தனியுரிமையை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை டைகர் வெளியிட்டிருக்கிறார்.