ரஷ்யாவில் வரலாறு காணாத பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் கம்சட்காவா பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பனிப்பொழி ஏற்பட்டது. இதன் காரணமாக பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் பனியால் மூடப்பட்டு இருந்தன. இதனால் வாகனங்களை அடையாளம் காண முடியாமல் அதன் உரிமையாளர்கள் அவதியடைந்தனர்.