விழுப்புரம் அருகே ஏரி வாய்க்காலைத் தூர்வார வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தார்.
டி. கொசப்பாளையம் கிராமத்தில் ஏரி கால்வாயைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது பாறையை அகற்ற வெடிவைக்கப்பட்ட நிலையில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த காயத்ரி என்ற 10 வயது சிறுமி கற்கள் தாக்கி உயிரிழந்தார்.
உரிய அனுமதியின்றி ஊராட்சி மன்ற தலைவர் பாறைக்கு வெடி வைத்ததாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளார்.