திருச்சியில் தமிழ்நாடு வேளாண் துறை மூலம் வழங்கப்பட்ட உளுந்து விதை தரமற்றுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பயிர் செய்ய வேளாண் விரிவாக்க மையம் மூலம் உளுந்து விதை விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், உளுந்து செடிகளில் மஞ்சள் தேமல் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் வருவாயை விவசாயிகள் இழந்துள்ளனர்.
இதனால், ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.