திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களைக் கடத்தி வந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு பயணியிடம் விலை உயர்ந்த ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் இருப்பதை அதிகாரிகள் அறிந்தனர். இதையடுத்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ போதைப் பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனைக் கடத்தி வந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.