ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்களும், மிட்செல் மார்ஷ் 72 ரன்களும் குவித்தனர். 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19 புள்ளி 3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணியின் அசுதோஷ் ராம்பாபு சர்மா 66 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.