மதுரை அருகே முகமூடி அணிந்து கொண்டு இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக இரவு நேரங்களில் டவுசர் அணிந்தும், குரங்கு குல்லா அணிந்தும் இரண்டு பேர் ஆயுதங்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்தனர்.
இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சிசிடிவி காட்சியின் அடிப்படையில், ஈரோட்டை சேர்ந்த சிவா மற்றும் சிவகங்கையை சேர்ந்த மருதுபாண்டி ஆகிய இருவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.