அமெரிக்காவில் புதிய கோல்டு கார்டு திட்டத்தின் கீழ் ஒரே நாளில் ஆயிரம் பேர் விசா வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு புதிய கோல்டு கார்டு திட்டம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி புதிதாக குடியேறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் 43 கோடி ரூபாய்க்கு கோல்டு கார்டு விற்கப்படுகிறது. அதனை ஒரே நாளில் ஆயிரம் பேர் வாங்கியுள்ளதாக ஓவல் அலுவலகம் கூறியுள்ளது.