வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ரத வீதியில் அமைக்கப்பட்ட வெயில் பந்தலை போல், மற்ற வீதிகளிலும் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், நடந்து செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால், பக்தர்களை பாதுகாக்க கோயில் வீதியில் பந்தல் அமைக்க இந்து அமைப்பினர் வலியுறுத்தினர். இதனையடுத்து ராமேஸ்வரம் நகராட்சியினர் கோயில் கிழக்கு ரத வீதியில் 200 மீட்டர் நீளத்தில் பந்தல் அமைத்துள்ளனர். இதேபோல் மற்ற வீதிகளிலும் பந்தல் அமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.