ஈரோடு அருகே 33 சவரன் நகை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த வீட்டுப் பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு சாஸ்தி நகரில் பல்கீஸ் பேகம் என்பவரது வீட்டில் திண்டுக்கலைச் சேர்ந்த ஜாஸ்மின் என்பவர் பணிப்பெண்ணாக சேர்ந்துள்ளார்.
பணிக்கு சேர்ந்த 3 நாட்களில் பீரோவில் இருந்த 33 சவரன் நகையை அவர் திருடி சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார்
தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஜாஸ்மினை கைது செய்து, 20 சவரன் நகையை மீட்டனர்.