ஈரோடு அருகே கூடுதல் வட்டி தருவதாக கூறி 2 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர்.
விஜயமங்கலத்தில் கனகரத்தினம், கிருஷ்ணவேணி தம்பதி நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி வருவதாக கூறியுள்ளனர்.
இதனை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்த நிலையில், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர்.