சிதம்பரம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் குறித்து கடலோர காவல் படையினர் மற்றும் மீன்வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
சாமியார் பேட்டை கடற்கரைக்கும் வேலைங்கிராயன்பேட்டை கடற்கரைக்கும் இடையே மஞ்சள் நிறத்தில் உருளை போல் பெரிய அளவு மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியது.
இதுகுறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்குச் சென்ற அதிகாரிகள், மர்மப் பொருளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.