வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் பின்னால் பள்ளி மாணவி ஓடிய விவகாரத்தில், ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்த ஆம்பூர் போக்குவரத்து பணிமனை மேலாளர், தற்காலிக நடத்துநரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவி ஒருவர் அரசு பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த அரசு பேருந்து நிற்காமல் சென்றதால், அந்த மாணவி பேருந்தை பிடிப்பதற்காக நீண்ட தூரம் ஓடினார்.
இந்நிலையில், நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் ஓட்டுநர் முனிராஜை சஸ்பெண்ட் செய்த ஆம்பூர் போக்குவரத்து பணிமனை மேலாளர், தற்காலிக நடத்துநர் அசோக்குமாரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.