ஈரோடு அடுத்துள்ள ஆட்டையம்பாளையம் பகுதியில் உள்ள ஓடையில் ரசாயனக் கழிவுகளைக் கொட்டிய ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகப் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
ரசாயனக் கழிவுநீர் கலப்பால் கால்நடைகளும், விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், மாநகராட்சி மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.