கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
களியக்காவிளை பகுதியில் நான்கு இளைஞர்கள் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இருசக்கர வாகனங்களை ஆபத்தான முறையில் ஓட்டியும் பைக்கின் மேல் நின்று கொண்டும் ரீல்ஸ் எடுத்தனர்.
அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், அவர்களை காவல்துறை கைது செய்தனர். பின்னர் எச்சரித்து இளைஞர்களை பிணையில் விடுவித்தனர்.