தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.
அடுத்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அமைக்கும் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்றடைந்த அவரை அதிமுக எம்பிக்கள் சி.வி.சண்முகம், தம்பிதுரை ஆகியோர் வரவேற்றனர்.
இபிஎஸ்-ஐ தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் டெல்லி பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.