திருச்சி திருவெள்ளரை பெருமாள் கோயிலில் பங்குனி தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவெள்ளரை பெருமாள் கோயிலில் கடந்த 17-ம் தேதி பங்குனி தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் தினந்தோறும் பெருமாள்-தாயார் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். விழாவில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். 100க்கும் மேற்பட்ட காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.