இந்தோனேசியாவில் புதிதாக இயற்றப்பட்ட இராணுவச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.
ஆட்சி அதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் இந்தோனேஷியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுரபயாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளைக் கலைக்க முயன்றதால் வன்முறை வெடித்தது.