மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் 12 ஆயிரத்து 505 பள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனவா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த மத்திய கல்வித்துறையின் இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், 12 ஆயிரத்து 505 பள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தேசிய கல்விக் கொள்கையின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்துவதே பி.எம்.ஸ்ரீ. திட்டத்தின் நோக்கம் என்றும், கற்றல் செயல்பாட்டில் மாணவர்களை நல்ல நிலையில் உருவாக்கவே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தார்.